உள்நாடு

துறைமுகநகர சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற வியாக்கியானத்தை சபாநாயகர் அறிவித்தார்

(UTV | கொழும்பு) – துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதாக உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் தெரிவித்துள்ளது.

இந்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை சபாநாயகர் இன்று சபையின் ஆரம்பத்தில் அறிவித்தார்.

இதன்படி, குறிப்பிட்ட சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு சர்வசன வாக்கெடுப்பும், விசேட பெரும்பான்மையும் அவசியம் என்றும் உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் குறிப்பிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் குறிப்பிட்ட சரத்துக்கள் திருத்தப்படுமாக இருந்தால், சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உயர்நீதிமன்ற வியாக்கியானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

கொழும்பில் 16 மணிநேர நீர் வெட்டு!

இலங்கையில் உள்ள பல அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

‘ஸ்புட்னிக் வி’ : 7 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி