உள்நாடு

துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள துருக்கிய வெளிவிவகார அமைச்சர் இன்று பிற்பகல் மீண்டும் துருக்கி செல்லவுள்ளார்.

துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லுட் சவுஸோக்லு (Mevlut Cavusoglu), ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று நாட்டை வந்தடைந்தார்.

துருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரியவும், இலங்கைக்கான துருக்கி தூதுவரும் வரவேற்றுள்ளனர்.

13 பேர் கொண்ட தூதுக்குழுவுடன் இலங்கை வந்த துருக்கி வெளிவிவகார அமைச்சர், உயர்மட்ட சந்திப்புகளை மேற்கொண்டு இன்று மாலை மீண்டும் துருக்கி நோக்கிப் பயணமாக உள்ளார்.

Related posts

சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம் – யாழில் சம்பவம்

editor

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று ஆரம்பம்

கோதுமை மாவின் விலைகள் குறைப்பு!