உள்நாடு

துருக்கி நாட்டின் புதிய தூதுவர் இராணுவ தளபதியுடன் சந்திப்பு [PHOTOS]

(UTV|கொழும்பு) – இலங்கைக்கான துருக்கி நாட்டின் தூதுவர் ஆர். டேர்னட் செகெர்சியோக்ளு நேற்று 26 பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவை ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு துருக்கி நாட்டினால் வழங்கப்படும் பயிற்சிகள், ஆதரவுகள் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக இராணுவ தளபதி புதிய துருக்கி நாட்டின் தூதுவருக்கு நன்றிகளை தெரிவித்ததுடன், எதிர்வரும் காலங்களிலும் இலங்கை நாட்டிற்கு தொடர்ந்து இப்படியான ஒத்துழைப்வை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் விடயங்கள் தொடர்பான ஒத்துழைப்பையும் ஏற்றுக் கொண்டு

இலங்கையின் வளர்ச்சிக்கு தனது நாட்டின் பாரிய ஒத்துழைப்பை வழங்குவதாக துருக்கி நாட்டின் தூதுவர் தெரிவித்துள்ளார் அத்துடன் அவரது வருகையை நினைவு படுத்தும் முகமாக நினைவுச் சின்னமொன்றை இராணுவ பாதுகாப்பு தலைமை பிரதானி பரிசாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊரு ஜுவாவின் உறவினர் கைது

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

மின்சாரம் மற்றும் எரிபொருள் சேவைகள் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி

editor