உலகம்

துருக்கியில் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. 

சிவ்ரிஸ் என்ற பகுதியை மையமாக கொண்டு நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
imageimage

ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான நிலநடுக்கத்தால், தியார், பக்கிர் உள்பட பல நகரங்களில், வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின.

நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

imageஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தை தொடர்ந்து 274 முறை நில அதிர்வும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

அதிகரிக்கும் கொரோனா – ஸ்பெயினில் மீண்டும் அவசரநிலை

பாகிஸ்தான் சொகுசு விடுதியில் குண்டுத்தாக்குதல்

நேபாளத்திற்கு புதிய பிரதமர்