வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு எந்த விடேச வசதிகளோ அல்லது சலுகைகளோ வழங்கப்படாது என்று சிறைச்சாலைகள் தலைமையக ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த கைதி சிகிச்சை பெற்று வரும் வார்டில் உள்ள நோய்வாய்ப்பட்ட கைதிகளுக்கு சாதாரண சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் இந்த கைதிக்கு மட்டும் எந்த விசேட வசதிகளும் வழங்கப்படவில்லை என்றும் ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையர் குறிப்பிடுகிறார்.
சிறைச்சாலை மருத்துவமனையில் உள்ள கைதிகள் மற்றும் சந்தேக நபர்களுக்கு வெளியில் இருந்து உணவு மற்றும் பானங்கள் வழங்குவது சட்டபூர்வமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.