உள்நாடு

துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்!

(UTV | கொழும்பு) –

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கோரமோட்டை பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக அப்பகுதிக்கு விரைந்த தருமபுரம் பொலிஸார் குறித்த செயற்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட வேளை சந்தேக நபர் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளார்.

அதன்போது அவரை கைது செய்யும் நோக்கில் துரத்திச் சென்ற வேளை மிருக வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த கட்டுதுவக்கு வெடித்ததில் 37 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சம்பிக்க உள்ளிட்ட 5 பேர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

150 கோடி ரூபாய் நிதி மோசடி – இந்தியாவில் தஞ்சமடைந்த குடும்பம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்

editor

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்