சூடான செய்திகள் 1

UPDATE-மாத்தறை துப்பாக்கி பிரயோகத்தில் பிரதான சந்தேக நபர் கைது

(UTV|MATARA)-மாத்தறை நகரில் இன்று இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தின் பிரதான சந்தேக நபர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர் மாத்தறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷாமர இந்திரஜித் எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் வெயங்கொடை பிரதேசத்தினை சேர்ந்தவர் என காவற்துறை விசாரணையில் அறியவந்துள்ளது.


மாத்தறை நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையர்கள் மற்றும் காவற்துறைக்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் காவற்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது கொள்ளையர்கள் பயன்படுத்திய இரு உந்தருளிகள் மற்றும் துப்பாக்கி ஒன்று காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.


மாத்தறை நகரில் வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையடிப்பதற்கு வந்த நபர்கள் மற்றும் காவற்துறைக்கு இடையில் கடும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தில் 3 காவற்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை அவசர அழைப்பிற்கு வழங்கப்பட்டுள்ள தகவலுக்கமைய , குறித்த பிரதேசத்திற்கு காவற்துறை விரைந்துள்ள நிலையில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

இந்நிலையில் கொள்ளையர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொரோனா வைரஸூக்கு சிகிச்சையளித்த 15 தாதியர்கள் வெளியேற்றம்

தேர்தலுக்கான மாதிரி வாக்குச் சீட்டை வெளியிட்ட ஆணைக்குழு

editor

எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் ரயில் புகையிரத பணி புறக்கணிப்பு