சூடான செய்திகள் 1

துப்பாக்கி சூட்டில் ஐவர் காயம்

(UTV|COLOMBO)-மோதர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஞ்ஞானந்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஐவர் காயமடைந்ததுள்ளனர்.

இன்று (10) மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த குழுவினர் மீது இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

மக்களின் மகிமை இன்று கொழும்பிற்கு

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதியை சந்தித்த ஜனாதிபதி

LIVE UPDATE: அமைச்சரவை மாற்றங்களின் படி புதிய அமைச்சர்கள் விபரம் இதோ…