உள்நாடு

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – விசேட விசாரணைகள் முன்னெடுப்பு

(UTV|ஹம்பாந்தோட்டை ) – ஹூங்கம பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் தேரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் அத்தியட்சகர்களின் கீழ் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பொலிஸ் ஆணையை மீறி தப்பிச் செல்ல முயற்சித்துள்ள சந்தர்ப்பத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் இருந்த துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் அருகில் பயணித்த வேன் ஒன்றில் இருந்த பிக்கு ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உந்துருளியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகள், சந்தேகித்திற்கிடமான உந்துருளி ஒன்றை நிறுத்துமாறு நேற்று சமிக்ஞை செய்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹாதகல ரஜமஹா விகாரையின் தேரர் என தெரியவந்துள்ளது.

Related posts

ஏப்ரல் மாதம் 22வது திருத்தம் பாராளுமன்றத்திற்கு

அதிகரிக்கப்படும் அதிபர்களுக்கான கொடுப்பனவு!

நீர் வழங்கல் தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தம்