உள்நாடுசூடான செய்திகள் 1

துப்பாக்கிச் சூட்டில் 9 வயதுடைய சிறுமி பலி – பெண் ஒருவர் காயம்

ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகுலாகம பகுதியில் இன்று (27) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்ணும் ஒரு சிறுமியும் காயமடைந்து குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹெட்டிபொல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

உயிரிழந்த சிறுமி 9 வயதுடையவர் என்றும் ஹெட்டிபொல, மகுலாகம பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், இறந்த சிறுமி தனது பாட்டியுடன் வீட்டில் தங்கியிருந்தபோது, ​​அருகில் இருந்த சிலர் பன்றிகளை வேட்டையாடும் சத்தம் கேட்டு, வீட்டை விட்டு வெளியே வந்தபோது இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்த பாட்டி குளியாப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறுமியின் சடலம் குளியாப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரைக் கைது செய்வதற்காக ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தேநீர் மற்றும் பால் தேநீர் விலைகள் குறைவு

‘இலங்கைக்கு இயன்ற அளவு உதவி செய்ய வேண்டும்’ – அவுஸ்திரேலிய எதிர்க்கட்சி

ஊரடங்குச் சட்டம் தளர்வு பிற்பகல் 2 மணி வரை நீடிப்பு