சூடான செய்திகள் 1

துண்டாக்கப்பட்ட யானையின் உடல்-தும்பிக்கை உலகையே உலுக்கிய புகைப்படம்

தென் ஆப்பிரிக்காவில் இறந்த யானையின் புகைப்படம் ஒன்று, உலகில் அனைவரிடத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் ஜெஸ்டின் சுலிவான். இவர் ஒரு ஆவணப்பட இயக்குனர் ஆவார். இவர் அண்மையில், போட்ஸ்வானா பகுதியின் வனத்திற்குச் சென்றார்.

அந்த வனத்தில் உள்ள விலங்குகளின் அரிய புகைப்படங்களை எடுக்க பல்வேறு விதமான நவீன புகைப்பட கருவிகளுடன் சென்றார். அவர் வனத்தில் ஏதேனும் அரிய காட்சிகள் இருக்கிறதா? என்பதை கவனிக்க டிரோனை பறக்கவிட்டு இயக்கினார்.

சிறிது நேரம் பறந்த டிரோன், ஓர் துயர காட்சியை காண்பித்தது. அந்த காட்சியில் யானை ஒன்று, தும்பிக்கை தனியாகவும், உடல்பகுதி தனியாகவும் துண்டிக்கப்பட்டு இறந்துக் கிடந்துள்ளது. இதனை கண்டு ஜெஸ்டின் கடும் அதிர்ச்சிக்குள்ளானர்.

பின்னர் சரியாக புகைப்படம் எடுத்தார். இந்த புகைப்படம்தான் இப்போது பார்ப்பவர்களின் இதயங்களை கனமாக்கி வருகிறது. இது குறித்து ஜெஸ்டின் கூறுகையில், ‘இந்த புகைப்படத்திற்கு ‘டிஸ்கனெக்‌ஷன்’ என பெயரிட்டுள்ளேன்.

இந்த பெயரை யானை-தும்பிக்கைக்கு இடையேயான முறிவை பற்றியது மட்டுமல்ல, விலங்குகள் வேட்டையாடப்படுவதற்கும், அவற்றை கண்டுக் கொள்ளாத நமக்கும்தான். இந்த புகைப்படத்தின் வலி மேலே இருந்து எடுத்ததால் நன்றாக புரியும்’ என கூறியுள்ளார்.

Related posts

நம்பிக்கையில்லா பிரேரணை; சுதந்திர கட்சி பிரதமருக்கு எதிராக வாக்களிக்கும்

ஈஸ்டர் தாக்குதலால் மாட்டிக்கொண்ட மைத்திரி – 2033வரை அவகாசம் கோருகின்றார்!

பாடசாலை செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகம்