உள்நாடு

தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவன் தொடர்பில் புதிய திருப்பம்!

(UTV | கண்டி ) –     தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவன் தொடர்பில் புதிய திருப்பம்!

இவ்வருடம் சாதாரண தர பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெற்ற மாணவரை தீ வைத்து எரித்ததாக சந்தேகிக்கப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பிட்டிய-தம்பவெல பிரதேசத்தில் வைத்தே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இம்முறை தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவன் குறித்த மாணவர் கண்டி அம்பிட்டிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். கடந்த சனிக்கிழமை இரவு, பரீட்சை பெறுபேறுகளை தனது பாட்டியிடம் தெரிவித்துவிட்டு, தந்தையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது குறித்த நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த நபர் மாணவன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

அந்நபர், மாணவனின் தந்தையிடம் கப்பம் கேட்டு, கொடுக்காததால், இவ்வாறு தீ வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கைகளிலும் கழுத்திலும் பலத்த தீக்காயம் ஏற்பட்டதன் காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு நேற்று காலை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அம்பிட்டிய பிரதேசத்தில் நீண்டகாலமாக பல்வேறு அச்சுறுத்தல்களில் ஈடுபட்டு வரும் கும்பலைச் சேர்ந்த ஒருவரே இந்த சம்பவத்தை செய்துள்ளதாகவும், மாணவனின் பெற்றோர் அச்சம் காரணமாக சம்பவத்தை மறைத்து வருவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இன்றும் 7 1/2 மணித்தியாலம் இருளில்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவையில் தாமதம்

தபால் மூல வாக்குப்பதிவு நாளை ஆரம்பம்.

editor