உள்நாடு

தீ விபத்து – 30 கடைகள் நாசம்

(UTV | கொழும்பு) –

மாவனல்லை நகரின் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 30 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. விரைந்து செயல்பட்ட பொலிஸார், மாவனல்லை பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பழங்கள், ஜவுளி மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் பல கடைகள் இந்த தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன், மாவனெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கத்தாரிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை

ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் – தமிழ் பெண் விளக்கமறியலில்

இதுவரை 821 கடற்படையினர் குணமடைந்தனர்