சூடான செய்திகள் 1

தீ விபத்து காரணமாக 09 வர்த்தக நிலையங்கள் தீயில் எரிந்து நாசம்

(UTV|COLOMBO)-சிலாபம் நகர சபைக்கு சொந்தமான வீதி​யோர வர்த்தக தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 09 வர்த்தக நிலையங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

தீ விபத்து ஏற்பட்டதையடுத்து சிலாபம் பொலிஸார் சிலாபம் நகர சபை தீயணைப்பு பிரிவுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் விரைந்து செயற்பட்டு தீயை கட்டுப்படுத்தியதால் பாரிய அனர்த்தம் தவிக்கப்பட்டிருப்பதாக பிரதேசவாசி ஒருவர் கூறினார்.

 

 

 

 

 

Related posts

கொழும்பில் கொரோனா தொற்று 150 ஆக அதிகரிப்பு

தெல்தெனிய கொலை சம்பவம் – சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

O/L, A/L பரீட்சை திகதிகள் தொடர்பில் சற்றுமுன் அறிவிப்பு வெளியானது !