(UTV | கொழும்பு) – தீவிரவாத குற்றச்சாட்டுகளில் கைதாவோரை புனர்வாழ்வுக்குட்படுத்தும் சரத்துக்கள் உள்ளடங்கிய விசேட வர்த்தமானியொன்று வெளியாகியது.
இந்த விசேட வர்த்தமானியில் அடிப்படைவாத மற்றும் தீவிரவாதப் போக்குடைய மத செயற்பாடுகளுடன் தொடர்புடைய வகையில் கைது செய்யப்படுவோரும் இந்த சட்டத்திற்குள் உள்ளடக்கப்படுவதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்படுவோரை புனர்வாழ்வளிப்பதற்கான புதிய விதிமுறைகளுடன் கூடிய வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.