உள்நாடுசூடான செய்திகள் 1

தீர்மானமின்றி நிறைவடைந்த செயற்குழுக் கூட்டம்

(UTV|கொழும்பு)-  பொதுத் தேர்தலுக்கான சின்னம் தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும் நோக்கில் நேற்று(28) பிற்பகல் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் எவ்வித தீர்மானமும் இன்றி நிறைவடைந்துள்ளது.

கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில், கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று மாலை செயற்குழுக் கூட்டம் இடம்பெற்றது.

இந்நிலையில் மீண்டும் நாளை மத்திய செயற்குழுக்  கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சில மாற்றங்களை உள்ளீர்த்து மீள் அனுமதி பெறும் நோக்கில் முன்வைக்கப்பட வேண்டும் என நேற்றைய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய அரசியல் சபை

நாட்டை துரிதப்படுத்தும் வேலைத்திட்டம் வெகு விரைவில் அறிமுகம்!

இடைநிறுத்தப்பட்ட 8 எம்பிக்களை அழைக்கும் மைத்திரியின் கட்சி!