விளையாட்டு

தீர்மானமிக்க டெஸ்ட் ஆரம்பமாகியது…

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டியை நியூசிலாந்தும் இரண்டாவது போட்டியை பாகிஸ்தானும் வென்ற நிலையில் தீர்மானமிக்க மூன்றாவது போட்டி, ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபு தாபியில் இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், இரண்டாவது டெஸ்டில் ஏற்பட்ட தோட்பட்டை காயம் காரணமான பாகிஸ்தானின் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் அப்பாஸ் இப்போட்டியில் பங்கேற்கமாட்டார் என்ற நிலையில், அவருக்குப் பதிலாக இளம் வேகப்பந்துவீச்சாளர் ஷகீன் அப்ரிடி டெஸ்ட் போட்டிகளில் இன்று அறிமுகத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

Related posts

நுவன் சொய்சாவிற்கு ஐசிசி இனால்6 வருட கால தடை

நாணயற் சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி

FIFA அரையிறுதி இன்று ஆரம்பம்