வகைப்படுத்தப்படாத

தீயில் சிக்கிய நாயை மீட்க போன நபர் பலி!

(UTV|AMERICA) அமெரிக்காவில் தீப்பிடித்த வீட்டில் சிக்கிய நாயை மீட்க போன நபர் எதிர்பாராத விதமாக தீயின் கோரப்பிடியில் உள்ளே சிக்கிக்கொண்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த, அமெரிக்காவின் மேய்ன் மாகாணம் ஓர்லண்ட் நகரை சேர்ந்தவர் சாம் கிராபோர்ட் (வயது 40). இவர் அங்குள்ள ஒரு வீட்டில் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில்,கடந்த திங்கட்கிழமை இரவு அவரது வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து, செய்வதறியாது திகைத்த சாம் கிராபோர்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறினார்.

இருப்பினும், தனது பாசத்துக்குரிய நாய் ஒன்று உள்ளே சிக்கி கொண்டதால், உடனே அவர் நாயை தேடி பற்றி எரியும் வீட்டுக்குள் சென்றார்.

ஆனால், எதிர்பாராதவிதமாக அவர் உள்ளே தீயின் கோரப்பிடியில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து தகவல் தெரிவிக்கப்படத்தில் அடிப்படையில் வந்த தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.

இதில், கரிக்கட்டையான நிலையில் சாம் கிராபோர்ட் உடல் மீட்கப்பட்டது. அதே சமயம் அந்த நாயின் உடல் கிடைக்கவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

ප්‍රහාරයෙන් පසු කටුවපිටිය දේවස්ථානයේ පළමු දේවමෙහෙය

No evidence to back allegations against Dr. Shafi – CID

கடும் சீற்றத்துடன் அமெரிக்காவை தாக்கியது புளோரன்ஸ் புயல்