சூடான செய்திகள் 1

தீப்பரவலால் 25 ஏக்கர் நிலப்பரப்பு அழிவு

(UTV|COLOMBO)-கொட்டகலை பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலின் காரணமாக, 25 ஏக்கர் நிலப்ப​ரப்பு அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நிலவி வரும் வரட்சியின் காரணமாகவே தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும் நேற்று (09) பண்டாரவளை – கொன்தஹேல வனாந்தரத்தில் ஏற்பட்ட தீப்பரவலால், 12 ஏக்கர் நிலப்பரப்பு அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

எல்பிட்டிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

கொழும்பு – கண்டி வீதியில் வாகன நெரிசல்

வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கு விளக்கமறியல்