கேளிக்கை

தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் திருமண வரவேற்பு

(UTV|INDIA)-பெங்களூருவில் நடைபெற்ற தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்குக்கும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி இத்தாலியில் இருவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என இருவருக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி தீபிகாவின் சொந்த ஊரான பெங்களூருவில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

நேற்று முன்தினம்  நடைபெற்ற இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள், சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அடுத்ததாக வரும் 27-ஆம் தேதி, ரன்வீர் சிங் குடும்பத்தினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சி, மும்பையில் நடைபெறுகிறது.

 

 

 

 

Related posts

தீபாவளிக்கு வெளியாகவிருந்த ரஜினியின் 2.0 படம் தள்ளிவைப்பு!!புதிய வெளியீட்டுத் திகதியும் அறிவிப்பு

திருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ்,சிம்பு ஜோடி

பிரபல நடிகர்களின் வழியில் புதிய அவதாரம் எடுக்கும் கமல்!!