கேளிக்கை

தீபிகாவுக்கும், ஜோக்கோவிச்சுக்கும் கள்ளத்தொடர்பு – முன்னாள் காதலி

(UDHAYAM, COLOMBO) – பொலிவுட் நடிகை தீபிகாவுக்கும், பிரபல டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச்சுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக அவரின் முன்னாள் காதலி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தீபிகா, பொலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு தீபிகா அமெரிக்கா சென்றபோது லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரபல டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச்சுடன் டின்னர் சாப்பிட ஹோட்டலுக்கு சென்றார்.

திருமணமான நோவாக் ஜோக்கோவிச்சுக்கும், ரன்வீரை காதலித்து வரும் தீபிகாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாஜாக்கோவிச்சின் முன்னாள் காதலியான நடாஷா பெக்வாலா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு தீபிகாவுடன் ஜோக்கோவிச் ஊர் சுற்றியதால் அவருக்கும், அவரின் மனைவி ஜெலினாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், நடாஷா ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

ஜோக்கோவிச் வழக்கறிஞர்கள், டிஜேக்கள், நடிகைகள் என்று பல துறைகளை சேர்ந்த பெண்களை டேட் செய்துள்ளார். அவர் ஜெலினாவை பத்து ஆண்டுகளாக காதலித்து மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உக்ரைன் ஜனாதிபதி நடித்த டி.வி தொடர் மறு ஒளிபரப்பு – NETFLIX

காட்டு தீயால் அவதிப்படும் பிரபல நடிகை

விவசாயியாக வாழும் ஜெயம் ரவி