உள்நாடு

திறப்பதா, இல்லையா : தீர்மானம் இன்று

(UTV | கொழும்பு) – எதிர்வரும் திங்கட்கிழமை (13) முதல் நாட்டை திறப்பதா, இல்லையா என்பது தொடர்பில் இன்று (10) தீர்மானிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெறவுள்ள தேசிய கொவிட் ஒழிப்பு செயலணியின் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

திங்கட்கிழமையன்று நாட்டை திறப்பதாக இருந்தால், அந்த நடவடிக்கை கட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்கப்பட வேண்டுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்ற அமர்வில்

மீண்டும் மின் தடை?

editor

மீண்டும் நாட்டில் டெங்கு பரவும் அபாயம்!