கிசு கிசு

திருமதி இலங்கை அழகிப் போட்டியில் நடந்தது இதுதான்

(UTV | கொழும்பு) –  2021 ஆம் ஆண்டின் திருமதி இலங்கை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர் இரண்டு நிமிடத்தில் கிரீடத்தை பறிகொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நேற்று (04.04.2021) 2021 ஆம் ஆண்டின் திருமதி இலங்கை அழகிப் போட்டியில் வெற்றிபெற்ற அழகிக்கு கீரிடம் சூட்டும் நிகழ்வு நடைபெற்றது.

போட்டியாளர் இல 20, திருமதி புஷ்பிகா டி சில்வா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, நிகழ்வின் பிரதம விருந்தினர்களான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ, கொழும்பு மாநகர சபை மேயர் ரோஷி சேனாநாயக்க, அழகுகலை நிபுணர் சந்திமல் ஜயசிங்க ஆகியாரால் கிரீடம் சூட்டி கௌரவிக்கப்பட்டார்.

பிரதம விருந்தினர்களால் கிரீடம் வழங்கப்பட்ட பின் முன்னாள் திருமதி இலங்கை அழகிப் பட்டத்தை வென்ற கரொலின் ஜூரி வெற்றி பெற்ற போட்டியாளர் அதற்கு தகுதியற்றவரென அறிவித்துள்ளார்.

போட்டியாளர் திருமணமானவராக இருக்க வேண்டும் என்பதோடு விவாகரத்து பெற்றவராக இருக்க முடியாது என்பதே அதற்கான காரணமாகும்.

அதன் பின் கரொலின் ஜூரி திருமதி புஷ்பிகா டி சில்வாவிடமிருந்து கிரீடத்தை எடுத்து போட்டியின் இரண்டாவது வெற்றியாளருக்கு அணிவித்தார்.

அதன் பின் சில நிமிடங்களுக்கு முன்பு கிரீடம் வழங்கப்பட்ட வெற்றியாளர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், கரொலின் ஜூரி மற்றும் அமைப்பாளர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளனர்.

போட்டியாளர்களை நிகழ்வுகளுக்கு சேர்ப்பதற்கு முன்பு அவர்களின் பின்னணி விபரங்களை அறிந்திருக்க வேண்டும் என்றும், ஜூரி பொதுமக்கள் முன்னிலையில் பிரபல்மடைய இவ்வாறு செயல்பட்டதாகவும், ஒரு போட்டியாளரை இழிவுபடுத்துவதாகவும் பல குற்றாச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படும் சாத்தியம்

தாய்லாந்தில் நடந்த அழகி போட்டியில் மியன்மாருக்காக உருகும் அழகி

அரசியல் தோல்விகளுக்கு பலிக்காடாகும் ‘புர்கா’ – ‘அசாத் சாலி’ [VIDEO]