வகைப்படுத்தப்படாத

திருமண கேக்காக மாறிய இளவரசர் ஹாரி-மேகன் மார்க்லே ஜோடி

(UTV|LONDON)-பிரிட்டன் இளவரச ஹாரி-மேகன் மார்க்லே திருமணம் நாளை லண்டனில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், லண்டனைச் சேர்ந்த லாரா மான்சன் என்பவர் ஹாரி திருமணத்திற்கு கேக் ஒன்றை வடிவமைத்துள்ளார். ஹாரி-மேகன் மார்க்லே போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கேக் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

ஜஸ் மற்றும் சாக்லேட்டால் செய்யப்பட்ட இந்த கேக்கானது 250 மணி நேரம் செலவிட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 300 முட்டைகள், 12 கிலோ பட்டர் மற்றும் 15 கிலோ மாவு கலந்து தயாரிக்கப்பட்டது. இதில் ஒரு பிரேமின் மேல் கேக், சாக்லேட் மற்றும் ஜஸ் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அந்த பிரேமை தவிர அனைத்தையும் உண்ணலாம்.

இந்த கேக் செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அனைவரும் ஹாரி மற்றும் மார்க்லே கேக்கை கண்டு ஆச்சரியத்தில் உள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

සංචාරකයින්ගේ පැමිණීමේ වර්ධනයක්

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் பட்டினிச்சாவு…

6 இஸ்லாமிய நாடுகளுக்கான தடை