உள்நாடு

திருமணப்பதிவுக்கான கட்டணத்தில் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – பதிவாளர் நாயகம் அலுவலகத்தின் அறிவிப்பின்படி, பொது திருமணப்பதிவு சட்டத்தின் அடிப்படையில் பதிவாளர் அலுவலகம் அல்லது வெளியிடங்களில் விவாகப் பதிவு உள்ளடக்கத்துக்கான கட்டணம் 100 ரூபாவில் இருந்து 120 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகின்ற திருமணத்துக்கான கட்டணம் 750 ரூபாவில் இருந்து 900 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

விவாகப் பதிவுக்கான பதிவாளர் உறுதிச்சான்றை வழங்குவதற்கான கட்டணம் 100 ரூபாவில் இருந்து 120ஆக உயர்வடைந்துள்ளது.

 

Related posts

இன்று 7 1/2 மணித்தியால மின்வெட்டு அமுலுக்கு

வாகன விபத்தில் ஐவர் படுகாயம்

கடன் தரப்படுத்தலில் இலங்கையை மேலும் தாழ்த்திய மூடிஸ் நிறுவனம்