உள்நாடு

திருமணத்தில் நடனமாடிய  யுவதி மரணம் 

(UTV | கொழும்பு) –  திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருந்த பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின் உயிரிழந்துள்ளார்.

ஹொரணை பதுவிட்ட பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வந்த மஞ்சரி ஆதித்ய பெர்னாண்டோ என்ற 25 வயதுடைய திருமணமாகாத யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த யுவதி, தான் பணிபுரியும் நிறுவனத்தில் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட போதே இவ்வாறு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் உயிரிழந்த யுவதி மேலும் இரு யுவதிகளுடன் நடனமாடிக்கொண்டிருந்த போது அவ்விடத்தை விட்டு வெளியேறியதாகவும் சிறிது நேரத்தில் சுகயீனமடைந்து ஹொரணை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது  வைத்தியசாலைக்கு யுவதியை அழைத்துச் சென்றதையடுத்து, பரிசோதனையின் போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸார்  குறிப்பிடுகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதிக்கும் மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor

மக்களின் ஒவ்வொரு ரூபாயையும் பயன்படுத்தும் போது கடவுளின் பணியாக கருதி செயற்படுகிறோம் – ஜனாதிபதி அநுர

editor

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தனர்

editor