உள்நாடு

திருமணத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கையில் வரையறை

(UTV | கொழும்பு) – திருமண வைபவங்களை ஏற்பாடு செய்யும் பொழுது அதற்கென திருமணம் நடைபெறும் பிரதேசத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியை பெறவேண்டும்.

திருமண வைபவத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை  (Invitees) 100 பேருக்கு வரையறுக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

திருமண வைபவம் மற்றும் அனைத்து வைபவங்களும் சுகாதார அமைச்சின் மூலம் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டலுக்கு அமைவாகவே நடைபெற வேண்டும் என்று சுகாதார அமைசசின் சுற்றுச்சூழல் சுகாதாரம், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லக்ஷ்மன் கம்லத் தெரிவித்துள்ளார்.

வைபவங்களின் போது முககவசம் அணிவதும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

இன்றும் 633 பேர் பூரண குணம்

தனது ஆட்சியின் கீழ் இனவாதம், மதவாதம் ஆகியவற்றுக்கு இடமில்லை – அநுர

editor

கஜேந்திரன் எம்பியின் வீட்டுக்கு முன்னாள் பதற்றம்- பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு