உள்நாடு

திருகோணமலை கடலில் கண்டெடுக்கப்பட்ட ஆளில்லா விமானம் – வெளியான தகவல்

திருகோணமலையை அண்மித்த கடலில் கண்டெடுக்கப்பட்ட இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான ஆளில்லா விமானம், இலங்கைக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட இறுதி அறிக்கை விமானப்படை தளபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆளில்லா விமானத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆளில்லா விமானம் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதும் தெரியவந்துள்ளது.

இது பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.

கடந்த 27ஆம் திகதி திருகோணமலைக்கு அருகில் உள்ள கடலில் இந்த ஆளில்லா விமானத்தை மீனவர்கள் குழு கண்டுபிடித்தது.

ஏறக்குறைய இரண்டு வாரங்களாக இந்த ஆளில்லா விமானம் கடலில் இருந்ததாகவும், அதனை மீண்டும் தொடர்புடைய நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

முகக்கவசம் அணியாத 1,060 பேரிடம் கொரோனா பரிசோதனை

பெரஹரா ஊர்வலத்தில் யானை திடீர் குழப்பம்

editor

சம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு!