உள்நாடு

திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்!

(UTV | கொழும்பு) –

கிழக்கு மாகாண தற்காலிக ஒப்பந்த அமைய ஊழியர்கள் ஒன்றியத்தினால் நிரந்தர நியமனம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கிழக்கு மாகாணத்தில் பணிபுரியும் ஊழியர்கள் திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டமானது திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண முதலமைச்சின் அலுவலக முன்றலில் ஆரம்பித்து பேரணியாக கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரமாக்கக் கோரியே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நிரந்தர நியமனம் வேண்டும், குறைந்த ஊதியம் பெறும் எங்களை நிரந்தர நியமனம் செய் உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியவாறும் கவனயீப்ர்பில் ஈடுபட்டார்கள். தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்களை நிரந்தரமாக்குதல் தொடர்பில் அரசாங்கத்தினால் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் இது வரை நிரந்தர நியமனம் செய்யப்படவில்லை எனவே பல முறை உரியவர்களுக்கு இது தொடர்பில் கோரிக்கை விடுத்தும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவே நிரந்தர நியமனத்தை பெற்றுத்தாருங்கள் எனவும் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பல ஊழியர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

   

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரணிலை நேரில் சந்தித்து, இறுதி தீர்வு கட்டப்போகும் சம்மந்தன்!

மகிந்த ராஜபக்சவுக்கு கொலை மிரட்டல் – நபர் ஒருவர் கைது.

பாராளுமன்றம் கூடியது