கேளிக்கை

திரிஷாவை போல் நடித்தால் அது எடுபடாது

(UTV|இந்தியா ) – தமிழில் வெளியாகி வெற்றிபெற்ற 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வரும் சமந்தா, திரிஷாவை போல் அச்சு அசலாக நடித்தால் எடுபடாது என தெரிவித்துள்ளார்.

.விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்திருந்த 96 படத்தினை தற்போது தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். அதில் திரிஷா நடித்த ஜானு கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார்.

சமீபத்தில் இதன் டீசர் வெளிவந்து இணையத்தில் அதிகம் வைரலானது. அதில் சமந்தாவின் நடிப்பை திரிஷாவின் நடிப்போடு ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.

சிலர் பாராட்டினாலும், மறுபுறம் ஒருசிலர் விமர்சிக்கவும் செய்கின்றனர். இதுபற்றி டுவிட்டரில் சமந்தா பேசியுள்ளார். “திரிஷாவின் நடிப்பை அப்படியே அச்சு அசலாக நடிக்க விரும்பவில்லை. அது எடுபடாது. ஒப்பிடுவதற்காக நாங்கள் படம் எடுக்கவில்லை. கதை இன்னும் அதிகமான மக்களை சேரவேண்டும் என்பதால் தான் எடுத்தோம்” என்று சமந்தா டுவிட் செய்துள்ளார்.

Related posts

‘மாஸ்டர்’ மகாராஷ்டிராவில் படுதோல்வி

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாமி

ஜூலையில் பிரியங்கா சோப்ராவுக்கு டும் டும்