உள்நாடு

‘திரிபோஷா’வில் அஃப்ளாடோக்சின் இருப்பதாக வெளியான தகவலை சுகாதார அமைச்சர் மறுப்பு

(UTV | கொழும்பு) –  புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் த்ரிபோஷாவில் அஃப்ளாடோக்சின் என்ற புற்றுநோய் உள்ளதாக பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய சுகாதார அமைச்சர், திரிபோஷாவில் அஃப்ளாடோக்சின் இல்லை எனவும், அவ்வாறு கூறிய சுகாதார அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

“நேற்று மாலை அந்தக் கதையைப் பற்றிக் கேட்டேன். அது அப்பட்டமான பொய் என்பதை நான் இந்த பாராளுமன்றத்தில் பொறுப்புடன் கூறுகின்றேன்” என ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த தவறான தகவலை பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இது மிகவும் அநியாயமான கதையாகும், ஏனெனில் இதில் அஃப்லாடாக்சின் என்ற புற்றுநோயானது இருப்பதாகக் கூறி சமூகத்தில் பீதியை ஏற்படுத்த முயல்கிறார்கள் எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

உயர்தரப் பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானம்!

ரிஷாதின் கைதும் நாளுக்கு நாள் வலுக்கும் எதிர்ப்புகளும் [VIDEO]

புதிதாக 39 பேருக்கு கொரோனா