உள்நாடு

“தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்” ஹஜ் வாழ்த்தில் ஜனாதிபதி ரணில்

ஆன்மிக மற்றும் உலக வெற்றியை அடைய, மனிதன் சுயநலத்தை விட்டொழித்து, தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம்கள் அந்த உன்னத நோக்கத்தின் அடிப்படையில் ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள்.

உலகம் முழுவதிலுமிருந்து முஸ்லிங்கள் அனைவரும் ஒரே நோக்கத்துடன் ஒரே புனிதத் தலத்தில் கூடி, மனிதகுலத்தின் எதிர்பார்ப்பான சமூகத்தின் ஒருமைப்பாட்டிற்காக இத்தினத்தில் பிரார்த்தனை செய்கிறார்கள்.

உலக மக்கள் அனைவருக்கும் சமத்துவம் மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை விதைக்கும் ஹஜ் கொண்டாட்டம், உலக அமைதிக்கான சிறந்த செய்தியையும் தரும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.

மனித குலத்தின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக அனைவரும் ஒரே இலக்கில் ஒன்றுபடும் ஹஜ்ஜுப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு இலங்கை மற்றும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி விடுத்துள்ள ஹஜ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related posts

ரஞ்சனின் குரல் பதிவுகள் கிடைக்கவில்லை – சபாநாயகர்

குழியில் வீழ்ந்து இரு சிறுமிகள் உயிரிழப்பு

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்