உள்நாடு

தியாகதீபம் திலீபனுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அஞ்சலி!

(UTV | கொழும்பு) –

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு தனது மனைவியுடன் சென்று இன்று அஞ்சலி செலுத்தினார். யாழ்ப்பாணத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்துள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மாலை வேளை யாழ்ப்பாணத்தை சேர்ந்த கலைஞர்களை யாழில் உள்ள விருந்தினர் விடுதியில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

சந்தோஷ் நாராயணனின் மனைவி மீனாட்சி சந்தோஷ் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியை சேர்ந்தவர் என்பதும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சந்தோஷ் நாராயணன் பிரம்மாண்ட இசை நிகழ்வொன்றை நடத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக செப்டெம்பர் 30ஆம் திகதி சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், திகதியில் மாற்றம் செய்யப்பட்டு, எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் மாலை 4 மணிக்கு சந்தோஷ் நாராயணன் பங்கேற்கும் ‘யாழ் கானம்’ இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஈரான் ஜனாதிபதியின் மரணம்: இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளது – ரணில்

பங்களாதேஷில் இலங்கையருக்கு கொரோனா தொற்று உறுதி

நாளை வரையில் நடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு