(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் தினேஸ் சந்திமால் நேபாளத்தில் இடம்பெறவுள்ள எவரெஸ்ட் பிரிமியர் லீக் கிரிக்கட் 20க்கு இருபது தொடரில் விளையாடவுள்ளார்.
அவர், அதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தினேஸ் சந்திமால் குறித்த தொடரில் பாயிரஹவா கிளேடியேட்டர்ஸ் அணியில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக அந்த நாட்டு தேசிய அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட புபுது தஸநாயக்க பணியாற்றவுள்ளார். தினேஸ் சந்திமால் இதற்கு முன்னர் இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.