உள்நாடு

தினேஷ் சாப்டர் கொலை வழக்கு – விசாரணை அதிகாரிகளுடனான சந்திப்பிற்கு பொலிஸ் மா அதிபரினால் அழைப்பு

(UTV | கொழும்பு) –  தினேஷ் சாப்டர் கொலை வழக்கு – விசாரணை அதிகாரிகளுடனான சந்திப்பிற்கு பொலிஸ் மா அதிபரினால் அழைப்பு

ஜனசக்தி குழும தலைவர் தினேஷ் ஷாப்டர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள சகல குழுக்களுக்கும் பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்னவினால் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
விசாரணைகள் தொடர்பான முன்னேற்றத்தை ஆராய்தல் உள்ளிட்ட எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

தடயவியல் புலனாய்வு குழு, கொலை மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்கள் தொடர்பிலான விசாரணைக் குழுக்கள் ஆகிய பிரிவுகள் இதில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் உள்ளிட்ட 8 குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.இந்த குழுக்களின் விசாரணை அதிகாரிகளுடனான சந்திப்பிற்கு பொலிஸ் மா அதிபரினால் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளதகாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சட்டம் ஒழுங்கை நிறைவேற்ற பொலிஸார் தயார் – மக்கள் பயப்படத் தேவையில்லை

editor

ஜனாதிபதி வேட்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ள திட்டம்.

editor

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

editor