உள்நாடுபிராந்தியம்

திடீரென தீ பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

ஹொரணை வைத்தியசாலைக்கு முன்பாக பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து இன்று வியாழக்கிழமை (06) இடம்பெற்றுள்ளது.

தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், தீ விபத்தில் முச்சக்கரவண்டியானது முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீப்பரவலை கட்டுப்படுத்தியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

நாட்டில் கடுமையாகும் சட்டம்!

வைத்தியர்களின் ஓய்வு வயதை 63ஆக நீட்டிக்க அமைச்சரவை அனுமதி

editor

ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் விளக்கமறியலில்