உள்நாடு

திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்

காலி மாத்தறை பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று காலி நகரில் இன்று (29) மாலை தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துள்ளதுடன், சமிக்ஞை விளக்கிற்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது மோட்டார் சைக்கிளில் திடீரென தீப்பற்றியுள்ளது.

இந்நிலையில், காலி மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் சென்று தீயை அணைத்துள்ளனர்.

எனினும் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமானது.

Related posts

மேலும் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம்

பாகிஸ்தான் – இலங்கைக்கு இடையிலான கலாசார பாரம்பரியம், மத சுற்றுலாவை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம்

இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம் – ஜனாதிபதி அநுர

editor