உள்நாடுசூடான செய்திகள் 1

திடீரென ஐ.நா திரைக்கு வந்த ஆசாத் மெளலானா!

(UTV | கொழும்பு) –

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் ஐ.நாவின் பக்க அறை நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விடயம் (21.09.2023) இடம்பெற்றுள்ளது

இதன்போது பல நாடுகளின் ராஜதந்திரிகள் இந்த ஆவணப்படத்தை பார்வையிட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனை தொடர்ந்து எழுந்த சந்தேகங்களும், கேள்விகளும் சனல் 4 இயக்குனர் மற்றும் ஆவணப்பட இயக்குனர்கள் இருவரிடமும் கேட்கப்பட்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் அசாத் மெளலானா திடீரென திரையில் தோன்றி எல்லோரையும் அதிர வைத்ததாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு முன்பாக சாட்சியமளிப்பதற்கு தான் தயார் என ஆசாத் மௌலானா அறிவித்துள்ளார் ஜெனிவாவில் அறிக்கையொன்றை வெளியிட்ட மௌலானா, சுயாதீன விசாரணை ஒன்றில் தான் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்

பிரித்தானிய சேனல் 4 தொலைகாட்சி மூலம் செப்டம்பர் 5 ஆம் திகதி ஒளிபரப்பப்பட்ட ஆவணப்படம் இலங்கையில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த ஆவணப்படம் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணைக்கு ஆதரவை உருவாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இதேவேளை தனது மனைவி மற்றும் குழந்தைகளை கூட அவதூறு செய்து சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் ஆசாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார். பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் தான் பணியாற்றிய போதும், தான்ஆயுத பயிற்சி பெற்ற போராளி அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாகவே ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல அரசியல் கொலைகள் தொடர்பான முக்கியமான மற்றும் ரகசியத் தகவல்கள் தமக்குக் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான நாடாளுன்ற உரைகளுக்கு…. இங்கு அழுத்தவும்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொது சுகாதார பரிசோதகர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில்

சவுதி அரேபியாவில் கட்டுமான வேலைகளுக்கு இலங்கையர்களுக்கு பல வாய்ப்புகள்

இலங்கையில் கிராமம் ஒன்று சீல் வைக்கப்பட்டது