உள்நாடு

முதலாம் திகதி முதல் 33 ரயில்கள் சேவையில்

(UTV|கொழும்பு)- எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் முதல் 33 ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த 33 ரயில்களில், 11 ரயில்கள் பிரதான மார்க்கங்களிலும் 11 ரயில்கள் கரையோர மார்க்கங்களிலும் பயணிக்கவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதனைத் தவிர, களனிவௌி மார்க்கத்தில் 6 ரயில்கள் அடுத்த வாரத்தில் சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரயிலில் பயணிப்பதற்கு 19,593 பேர் முற்பதிவு செய்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

முற்பதிவு செய்யப்பட்ட ஆசனங்களைத் தவிர, மேலதிக ஆசனங்கள் காணப்படுவதால், அதில் அலுலக ஊழியர்களுக்கு பயணிக்க முடியும் என ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அதற்காக நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Related posts

அதிவேக நெடுஞ்சாலைகளில் LANKA QR முறையின் ஊடாக கட்டணம் அறவிட அனுமதி

க.பொ.த (சா/த) குறித்த அறிவித்தல்

`சைனோஃபாம்` இரண்டாவது `டோஸ்` ஞாயிறன்று