உள்நாடு

திங்கள் முதல் நடைமுறையாகும் சட்டங்கள்

(UTV | கொழும்பு) – தேசிய அடையாள அட்டை இலக்க முறை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் கடுமையான முறையில் அமுலாக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதற்கு மாறாக வீடுகளிலிருந்து வெளியே செல்பவர்களை கைது செய்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொதுமக்கள் தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமைய, வீடுகளிலிருந்து வெளியேறவேண்டும்.

அதற்கமைய தமது அன்றாட செயற்பாடுகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கமைய, அடையாள அட்டையின் இறுதி இலக்க முறைமை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை அமுலில் இருக்கும்.

Related posts

வெள்ளவத்தை கோயிலை இடிக்க சரத் வீரசேகர ஆவேசம்

ஜோன்ஸ்டனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வழக்கு

இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பு