உள்நாடுவணிகம்

திங்கள் முதல் சீனி விலையில் குறைவு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பழுப்பு நிற சீனி சதொசவின் ஊடாக கிலோ ஒன்று 115 ரூபாவுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

லங்கா சீனி நிறுவனம் தற்போது இலாபத்தில் இயங்கி வருகிறது. எனவே அந்த லாபத்தின் பயனை பொதுமக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையிலேயே புதுவருடக்காலத்தில் சீனியின் விலையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

லங்கா சீனி நிறுவனம் கடந்த வியாழனன்று 142 மில்லியன் ரூபாவை விற்பனை வருமானமாக பெற்றதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

லண்டன் நகரில் இருந்து வந்தவர்கள் அனைவரும் சீனர்கள் [UPDATE]

பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை நாளை

இன்று இதுவரை 468 பேர் தொற்றாளர்களாக அடையாளம் [UPDATE]