உள்நாடு

திங்கள் முதல் அதிவேக ரயில் சேவைகள்

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நகரங்களுக்கு இடையிலான அதிவேக ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இரவு நேர அஞ்சல் ரயில் மற்றும் வழமையான நேர அட்டவணைக்கு அமைய இரவு 7 மணிக்கு பின்னர் இடம்பெறும் ரயில் சேவைகளுடன், குறுந்தூர ரயில் சேவைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கொரோனா காரணமாக இருந்த மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை நீக்கப்பட்ட பிறகு, நவம்பர் 1 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையேயான அலுவலக ரயில்கள் மாத்திரம் தற்சமயம் இயக்கப்படுகின்றன.

எனினும் இரவு 7.00 மணிக்குப் பிறகு நீண்ட தூர ரயில்கள் மற்றும் குறுகிய தூர ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படவில்லை.

இந்நிலையில் நடைமுறையில் உள்ள முறைமைக்கு அமைய இரவு 7 மணிக்கு பின்னர் பயணிகளின் அவசியத்தன்மை கருதி மாத்திரம் ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் – சட்டமா அதிபரின் மீளாய்வுக்கு

சீரற்ற காலநிலை: பலர் உயிரிழப்பு- வளிமண்டலவியல் திணைகளம் விடுத்த எச்சரிக்கை