அரசியல்உள்நாடு

திகாமடுல்ல தேர்தல் மாவட்ட முடிவுகளை மீள எண்ணுமாறு தேசிய காங்கிரஸ் தேர்தல் ஆணைக்குழுக்கு மகஜர்

திகாமடுல்ல தேர்தல் மாவட்ட பொதுத் தேர்தல் முடிவுகளை மீள எண்ணுமாறு, தேர்தல் ஆணைக்குழுவிடம் தேசிய காங்கிரஸ் நேற்று (22) மகஜர் சமர்ப்பித்துள்ளது.

தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் இந்த மகஜரை நேற்று சமர்ப்பித்தனர். இந்த மகஜரில், திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சிகளின் வாக்குகளை எண்ணும் விடயம் உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களை அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் காலங்களில் ,தேசிய காங்கிரஸின் செயற்பாடுகளைக் குறிவைத்து பின்னப்பட்ட சதிவலைகள்,நகர்வுகள் மற்றும் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் பற்றியும் அந்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Related posts

சிங்கப்பூரில் இருந்த 291 பேர் நாடு திரும்பினர்

Green Apple களின் விலை குறைந்துள்ளது.

PHI அதிகாரிகள் – அனில் ஜாசிங்க இடையே இன்று கலந்துரையாடல்