உள்நாடு

தாறுமாறாக உயர்ந்த பெரிய வெங்காயம் மற்றும் தேங்காயின் விலைகள்

ஒரு கிலோ இந்திய பெரிய வெங்காயத்தின் விலை 500 முதல் 550 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தேங்காய் ஒன்றின் விலை 180 முதல் 230 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் இன்று வியாழக்கிழமை (05) தெரிவித்தனர்.

பாகிஸ்தான் பெரிய வெங்காயம் மற்றும் ஏனைய பெரிய வெங்காய வகைகளின் விலை கிலோ ஒன்றுக்கு 400 முதல் 450 ரூபா வரை உள்ளதாகவும், வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

கொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் இந்திய பெரிய வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த விலை 400 ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

சில மாதங்களுக்கு முன் 40 ரூபா முதல் 60 ரூபா வரை விற்பனையான ஒரு சிறிய குவியல் தேங்காயின் விலை, தற்போது மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டு, 180 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக தேங்காய் விற்பனையாளர்கள் மேலும் தெரவித்தனர்.

Related posts

அனுராதபுரத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதியுதவி!

“கல்வியில் ஏற்படும் மறுமலர்ச்சி” சுசிலின் முக்கிய அறிவிப்பு

மீட்டர் சவாரிகள் தற்காலிகமாக நிறுத்தம்