உலகம்

தாய்லாந்தில் டெலிகிராம் செயலி முடக்கம்

(UTV | தாய்லாந்து) –  தாய்லாந்தில் தீவிரமாகி வரும் அரசுக்கு எதிரான போராட்டங்களை தடுக்கும் நடவடிக்கையாக, டெலிகிராம் செயலியை அந்த நாட்டு அரசு முடக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

2014 ஆண்டில் தாய்லாந்தில் கலகம் மூலம் ஆட்சியைப் பிடித்த பிரதமர் பிரயூத் சன் ஓச்சா, கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் இவரது கட்சி முறைகேடு செய்து ஆட்சியில் நீடிப்பதாக ஜனநாயக செயல்பாட்டாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், அவர் பதவி விலக வலியுறுத்திய மாணவர்கள் வழிநடத்தும் போராட்டங்கள் கடந்த மூன்று வாரங்களாக தீவிரமாகி வருகின்றன.

மேலும், முக்கிய நகரங்களில் நான்கு பேருக்கு மேல் மக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டது. குறித்த விதிமுறைகளை மீறி ஆயிரக்கணக்கானோர் திரளும் போராட்டக்காரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, தலைநகர் பாங்காக் உட்பட பல நகரங்களில் அரசு எதிர்ப்பாளர்களின் போராட்டம் அமைதிவழியில் நடந்தது.

இந்த நிலையில், போராட்டக்காரர்கள் ஒன்று கூடவும் போராட்ட திட்டங்களை வகுக்கவும் டெலிகிராம் செயலியை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஆட்சியாளர்கள், அந்த செயலியை நாட்டில் முடக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

தாய்லாந்தில் இன்டர்நெட் சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களிடமும் டெலிகிராம் செயலியை முடக்குமாறு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இடிபாடுகளுக்கு இடையே இதயத் துடிப்பை தேடும் மீட்புப் படையினர்

சீனாவுக்கு ஆதரவாக கருத்துக்களை பரப்பும் கணக்குகள் 170 000 நீக்கம் : டுவிட்டர் அதிரடி

இந்தியாவில் 2 மில்லியனை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை