உள்நாடு

தாய்லாந்தில் அழகிப் போட்டி – 16 நாடுகளைச் சேர்ந்த 42 போட்டியாளர்கள் – மகுடம் சூடிய இலங்கை சிறுமி

தாய்லாந்தில் நடைபெற்ற I am Model Search Kids International – 2025 அழகிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய 08 வயதான ஏஞ்சலா விமலசூரிய மகுடத்தை வென்று இன்று (26) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

உலகின் 16 நாடுகளைச் சேர்ந்த 42 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்தப் போட்டி தாய்லாந்தின் பேங்கொக்கில் கடந்த 24ஆம் திகதி நடைபெற்றது.

ஏஞ்சலா விமலசூரிய கொழும்பு, ஹெவ்லொக் பிளேஸில் வசிப்பவர், அவர் புனித லோரன்ஸ் கல்லூரியில் 04 ஆம் தரத்தில் கல்வி கற்கிறார்.

இந்த வெற்றியுடன் ஏஞ்சலா தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-403 இல் இன்று (26) பிற்பகல் 11.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவரை வரவேற்பதற்காக அவரது பயிற்சியாளர் உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தனர்.

Related posts

நான்கு மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 150 ஸ்மார்ட் மலசலகூடங்கள்

இன்னும் மூன்று நாட்களில் ‘நீண்ட வரிசைகளுக்கு’ தீர்வு