உள்நாடு

தாய்த்தமிழக தொப்புள் கொடியான் விஜயகாந்த் – மனோ எம்.பி இரங்கல் செய்தி

(UTV | கொழும்பு) –

இலங்கையில் வாழுகின்ற தமிழர்கள் மத்தியில், எம்மை நேசித்த, எமக்காக தமிழ் திரையுலகை அணி திரட்டிய, மதுரை மண்ணுக்கே உரிய வீரத்தமிழனாய் எமக்காக குரல் எழுப்பிய “தாய்த்தமிழக தொப்புள் கொடியான்”என உணரப்பட்டவர், விஜயகாந்த் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழக தே.தி.மு.க தலைவர், நடிகர் விஜயகாந்த் மறைவு தொடர்பில், மனோ எம்.பி மேலும் கூறியதாவது,விஜயகாந்த், தமிழ்நாட்டு திரை வானிலும், பின் அரசியல் வானிலும் சூறாவளியாக எழுந்தார். இடையில் திடீரென அமைதி தென்றலானார். புரட்சி கலைஞர் என்ற தமிழ் நடிகர், தே.தி.மு.க தலைவர் என்ற எழுச்சி அரசியலர் என்ற பிரபல அடையாளங்களை மீறி சிறந்த மனிதர் என ஒட்டுமொத்த தமிழுலகில் அறியப்பட்டார்.

கடல் கடந்து இலங்கையில் வாழுகின்ற தமிழர்கள் மத்தியில், எம்மை நேசித்த, எமக்காக தமிழ் திரையுலகை அணி திரட்டிய, மதுரை மண்ணுக்கே உரிய வீரத்தமிழனாய் எமக்காக குரல் எழுப்பிய “தாய்த்தமிழக தொப்புள் கொடியான்” என உணரப்பட்டவர், விஜயகாந்த். தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக, ஒட்டுமொத்த இலங்கை வாழ் தமிழர்களின் அஞ்சலிகளை தெரிவித்து கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கும், அவரது தே.தி.மு.க கட்சியினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மின் கட்டணம் செலுத்த சலுகைக் காலம்

சட்டமா அதிபரின் அறிக்கை தொடர்பில், CID இடம் அறிக்கை கோரல்

கண்டியில் அதிர்வு – விசேட ஆய்வுகள் முன்னெடுப்பு