சூடான செய்திகள் 1

தாமரை கோபுரத்தின் நிர்மானப்பணி ஒப்பந்தம் – கோப் குழு விசாரணை

(UTVNEWS | COLOMBO)  – தாமரை கோபுரத்தின் நிர்மானப்பணிகளில் ஒப்பந்தம் முதல் அதன் அனைத்து நடவடிக்கைகள் தொடர்பிலும் முழுமையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற குழு (கோப்) இன்று(18) தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு உள்ளிட்ட தொடர்புடைய ஏனைய நிறுவனங்கள் மிக விரைவில் கோப் குழுவுக்கு அழைக்கப்படுவார்கள் என, அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

தாமரை கோபுரத்தின் நிர்மாண பணிகளுக்காக 2012ஆம் ஆண்டு சீனாவின் ALIT நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 2 பில்லியன் பணத்துக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 16ம் திகதி கருத்து வெளியிட்டிருந்தார்.

தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டு இதனை ஜனாதிபதி கூறியுள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட கடந்த 17ம் திகதி கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று(18) அறிக்கையொன்றை வெளியிட்ட எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தாமரை தடாகத்தின் நிர்மாண பணிகளில் தற்போதுவரை சைனா நெஷனல் இலக்ரோனிக் நிறுவனம் மாத்திரமே ஈடுபட்டு வருவதாகவும் குறித்த இரண்டு பில்லியன் ரூபாய் பணத்தை சீனாவின் ALIT நிறுவனத்துக்கு வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஷவேந்திர சில்வா நியமனம் – தமிழ் மக்களை எட்டி உதைத்தது

ஹிருனிக்காவுக்கு ஏன் 03 வருட சிறை? முழு விபரம்

ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நான் இல்லை -நவீன்