சூடான செய்திகள் 1விளையாட்டு

தான் விளையாடும் இறுதி ஒருநாள் போட்டி இயலுமானால் வாருங்கள் – மலிங்க (video)

(UTVNEWS | COLOMBO) – இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி பங்களாதேஷ் அணியுடனான ஒரு நாள் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

எனினும் லசித் மலிங்க எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெவுற்ற சர்வதேச இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடர் வரை இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இந் நிலையிலேயே மலிங்கவின் ஒருநாள் தொடர் ஓய்வு குறித்து உத்தியோகபூர்வமாக காணொளிப் பதிவொன்றினூடாக அறிவித்துள்ளார்.

மேலும் அந்தக் காணொளிப் பதிவில் 26 ஆம் திகதி தான் விளையாடும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியை கண்டுகளிக்க இயலுமானால் ஆர்.பிரேமதாச மைதானத்திற்கு வருமாறும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

தொடர்ந்தும் பிரச்சினையை இழுத்தடிக்க முடியாது-சஜித்

ஐ.தே.கட்சியின் மக்கள் கூட்டம் எதிர்வரும் திங்கள்(17) வரை ஒத்திவைப்பு

தொழிற்சாலையொன்றில் தீப்பரவல்…