கிசு கிசு

தான் கட்டின கூட்டில் அந்நியர்களுக்கு முட்டையிட இடமில்லை

(UTV|பொலன்னறுவை ) – தான் கட்டின கூட்டில் அந்நியர்களுக்கு (மற்றவர்களுக்கு) முட்டை இட ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்துத் தெரிவித்துள்ளார்.

“இந்த வைத்தியசாலை சீனாவினால் தனக்கு வழங்கப்பட்ட பரிசு. நான் தான் அந்த வைத்தியசாலைக்கு நியமனங்களை வழங்குவேன். அரசியல் தலையீட்டில் அவர்களுக்கு விரும்பியவர்களுக்கும் விரும்பாதவர்களுக்கும் நியமனங்களை வழங்க முடியாது. நான் கட்டின கூடுகளில் முட்டை இட யாருக்கும் நான் இடமளிக்கப் போவதில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

சீனாவினால், பொலன்னறுவை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறுநீரக வைத்தியசாலைக்கான நியமனங்கள் வழங்குவதில் சில அரச அதிகாரிகள் சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை வரலாற்றில் பாராளுமன்ற அமர்வுகளை அதிகளவில் ஒத்திவைத்த ஜனாதிபதி

பிரதமர் மஹிந்த பதவி விலகுவாரா?

திமுத் மற்றும் மஹேல இருவரும் ஒரே நிலைப்பாட்டில்